சாணக்கியன் எம் பிக்கு களுவாஞ்சிகுடியில் வாழ்த்து.
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற
குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியனின் ஆதரவாளர்களால் இன்று வெள்ளிக்கிழமை(06.02.2026)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பிரயாணிகளுக்கு
இனிப்புக்கள் பரிமாறி, பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளர்.
இதன்போது மண்முனை தென் எருவிப் பற்று
பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர்
விமலநாதன் மதிமேனன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், என பல இதன்போது
கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment