7 Feb 2026

வந்தாறுமூலை பெருவெளி குளத்துவட்டை கண்டங்களில் அறுவடை திகதியை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல்.

SHARE

வந்தாறுமூலை பெருவெளி குளத்துவட்டை கண்டங்களில் அறுவடை திகதியை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடையைத் தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை(07.02.2026) பெருவெளி மற்றும் குளத்துவட்டை கண்டங்களின் கமநல அமைப்புக்களின் நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் எதிர்கால நடவடிக்கை மற்றும் அறுவடை திகதி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதனடிப்படையில் பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கண்டங்களினதும் அறுவடைப் பணிகள் எதிர்வரும் 13.02.2026 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் இரு கண்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்தீருந்தனர். அறுவடைப் பணிகளை எவ்வித தடையுமின்றி சுமூகமாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைக் குறித்த கமநல அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 





SHARE

Author: verified_user

0 Comments: