8 Jan 2026

களுவாஞ்சிகுடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.

SHARE

களுவாஞ்சிகுடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடியில் டொங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை(07.01.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது களுவாஞ்சிகுடிநகர் மற்றும் பொதுச்சந்தையை சூழவுள்ள பல்வேறு இடங்களில் டெங்கு அபாயம் பரவுக்கூடிய பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதார பரிசோதகர் குழாம், மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிசார் இணைந்து முன்னெடுத்து இருந்தனர். 

இதன்போது களுவாஞ்சிக்குடி மீன்சந்தையில் சுகாதார சீர் கேடுகள் நிறைந்ததாக காணப்பட்ட மீன் வியாபாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படன.














SHARE

Author: verified_user

0 Comments: