8 Jan 2026

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை.

SHARE

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை.

செவ்வாய்கிழமை(06.01.2026) அதிகாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதானால் தாழ் நிலங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தாழ்நிலகள் அனைத்தும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை அவதானிக முடிகின்றது.

அப்பிரதேசத்தின் திருப்பழுகாமம் கிராமத்தில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் பல வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதைக் காணமுடிகின்றது. 

இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் வெள்ளநீர் உட்புகுந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்து நிலமையை அவதானித்துள்ளார். 

அந்த வகையில் போரதீவுப் பற்றுப் பிரதேச சபை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை தற்காலிக வடிகான் அமைத்து வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: