கழிவுளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து
வீதியோரத்தில் வீசுவதற்கு முற்பட்டவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணையில் இரவோடு இரவாக செவ்வாய்கிழமை(20.01.2026) இரவு கழிவுகளை வட்டாரக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வீசுவதற்கு முயன்ன்ற இருவரை துறைநீலாவணை வட்டார பிரதேச சபை உறுப்பினரும், அப்பகுதி பொதுமக்களும் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குபட்பட்ட துறைநீலாவணை பிரதான வீதியில் மிக நீண்டகாலமாகவிருந்து வெளிஇடங்களிலிருந்து வருபவர்கள் வாகனங்களில் கழிவுகளைக் கொண்டுவந்து மிகவும் சூட்சுமமான முறையில் வீதியின் இரு மருங்கிலும் வீசிவிட்டுச் செல்வது வழங்கமாகவுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் துறைசார்ந்துருக்கு முறைப்பாடளித்து வந்துள்ளனர்.
இவ்வாறு வழிவுகளைக் கொட்டுபவர்ளை கையும்
மெய்யுமாக பிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இணங்க அப்பகுதி பொதுமக்களும்,
துறைநீலாவணை வட்டாரத்திப் பிரதேச சபை உறுப்பினரும் அப்பகுதியில் காத்திருந்து வட்டாரக
வாகனத்தில் இவ்வாறு கழிவுகளைக் ஏற்றிவந்து கொட்டுவதற்கு முயன்றவேளையில் அவரகள்; பிடிபட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் அறிந்த உடனேயே
செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் அவ்விடத்திற்கு அப்பகுதி சுகாதார பரிசோதகர், மண்முனை
தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோர் வருகை தந்து கழிவுகளை ஏற்றிவந்த
வாகனத்தையும், உயரிய இரு நபர்களையும், களுவாஞ்சிகுடி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment