4 Jan 2026

களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து தெய்வாதீனமமாக உயிர் தப்பிய சாரதி.

SHARE

களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து தெய்வாதீனமமாக உயிர் தப்பிய சாரதி.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்திருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பின்னர் ஆலயத்தின் மதிலிலும் மோதிய  விபத்துச் சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை(04.01.2026) சம்பவித்ததாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி பயணித்த வட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இவ்வவிபத்து சம்பவித்துள்ள இந்நிலையில், சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.






SHARE

Author: verified_user

0 Comments: