21 Jan 2026

போதைவஸ்த்துக்கள் மீதான அறிவை பகிர்ந்து உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்வு.

SHARE

போதைவஸ்த்துக்கள் மீதான அறிவை பகிர்ந்து உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்வு.

போதைவஸ்த்துக்கள் மீதான அறிவை பகிர்ந்து உயிர்களைக் காப்போம் எனும் தொணிப்பொளின் கீழ் பாடசாலை மாணவர்ககளுக்கான விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான வழிப்பணர்வு சனி மற்றும் ஞாயிறு(17,18.01.2026) இரு தினங்களும் மட்டக்களப்பு மென்றேசா பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.மாமாங்கராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், துறைசார் வளவாளர்கள் என பரும் இதன்போது கலந்து கொண்டு மாணவர்களுக்குரிய விளக்கங்களையும், தெழிவூட்டல்களையும் வழங்கினர். 

இதன்போது மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிகள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், என பலரும் கந்து கொண்டிருந்தனர்.













 

SHARE

Author: verified_user

0 Comments: