31 Dec 2025

போரதீவுபற்று பிரதேச சபையும் அப்பகுதி பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

SHARE

போரதீவுபற்று பிரதேச சபையும் அப்பகுதி பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

போரதீவுபற்று பிரதேச சபையும் அப்பகுதி பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், பரிசளிப்பு விழாவும், பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை (30.12.2025) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எவ்.றிப்கா கலந்து கொண்டிருந்தார். 

மேலும் இந்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், உப தவிசாளர் .கயசீலன், பிரதேச சபைச் செயலாளர் சி.பகிரதன், பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகஸ்த்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது தேசிய வாசிப்பு மாதத்தத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: