பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இவ்வாறு பாதிப்புற்ற மக்களுக்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் உதவிகளை நல்கி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி திங்கட்கிழமை(08.12.2025) வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திலிருந்து அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு இவ்hறு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கபிரதி நிதிகள், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை.தினேஷ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தமது தேவையை அறிந்து பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment