பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில்
ஓவியத்தூறல்கள் சித்திரக் கண்காட்சி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஓவியத்தூறல்கள் எனும் தலைப்பில் வருடாந்த வலய மட்ட சித்திரக் கண்காட்சி திங்கட்கிழமை (22.11.2025) களுவாஞ்சிக்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வு நிலை இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் ம.தயாபரன், கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பேராசிரியர் சு.சிவரெத்தினம், பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்கள் மற்றும் சித்திரப்
பாட ஆசிரியர்களால் வரையப்பட்ட பல்வேறு கண்கவர் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு
அவற்றை பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள்
பார்வையிட்டு வருகின்றனர்.










0 Comments:
Post a Comment