23 Dec 2025

மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பாவை பூஜை.

SHARE

(தீபன்)

மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பாவை பூஜை.

மட்டக்களப்பில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்ற திருப்பாவை பூஜை நிகழ்வு இம்முறையும் மிகவும் சிறப்புற நடைபெற்ற வருகின்றன. 

இந்த திருப்பாப்பூஜை நிகழ்வு மார்கழி 16 ஆம் திகதி அதிகாலை வேளையில் முதல் நாள் பூசை ஆரம்பமாகியது. இது எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளது. 

இக்காலத்தில் தினமும் சிறப்பு திருப்பாப்பூஜைகள் இடம்பெற்று வருகின்றன. 

30 நாட்களும் 30 குடும்பங்கள் முன்னின்று இப்பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வேளையில் சுப்ரபாதத்தோடு ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டு, கண்ணன் பஜனை குழுவினரின் பஜனையோடு, திருப்பாவை பாடல்களும் பாடப்பட்டு பின் பூசை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். இப்பூஜை நிகழ்வுகளில் அப்பகுதி மகா விஷ்ணு பக்தர்கள் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: