மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின்
ஏற்பாட்டில் இரத்ததான முகாமும், நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியும் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் இரத்ததான முகாமும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணங்கள் சேகரிக்கும் பணி இன்றைய தினம் திங்கட்கிழமை(02.12.2025) செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, டிக்வா புயலின் தாக்கத்தினால், நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறிதர் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கப்போடி சசிகுமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment