5 Dec 2025

விநாயகர் சஷ்டி விரதம் இன்று ஆரம்பம் - மட்டக்களப்பில் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்.

SHARE

விநாயகர் சஷ்டி விரதம் இன்று ஆரம்பம் - மட்டக்களப்பில் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்.

விநாயகர் விரதங்களுள் மிக முக்கியமான விரதமாக கொள்ளப்படும் விநாயகர் சஷ்டி விரதம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05.12.2025) மட்டக்களப்பின் பல்வேறு இந்து ஆலயங்களில் ஆரம்பமாகியுள்ளது. 

மட்டக்களப்பு, செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயம், தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் போன்ற பல ஆலயங்ககளில் பக்தி பூர்வமாக ஆரம்பமாகின. 

ஆலயங்களில் இடம்பெற்ற பூர்வாங்க கிரியைகளை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விநாயகர் காப்புச்சாத்தும் நிகழ்வு நடைபெற்றன. 

இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய் பிறை பிரதமை முதல், மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை நடைபெறும். விநாயகரின் அருள் வேண்டி பக்தர்கள், 21 நாட்கள் விரதமிருந்து வழிபடுகின்றமை சிறப்பம்சமாகும். 

இவ்விரதத்தை பிள்ளையார் பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம், பிள்ளையார் நோன்பு, எனவும் அழைப்பர், 

மனித வாழ்வின் தடைகளை நீக்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விநாயகப் பெருமானை இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றமை வழக்கமாகவுள்ளது. இவ்விரதம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
















  

SHARE

Author: verified_user

0 Comments: