சுத்தமான குடிநீரின்றி வாழ்ந்த மக்களுக்கு
குழாய் மூலமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் வேட்டுகோளிற்கிணங்க போதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் தொடர்பு கொண்டு அப்பகுதி மக்களுக்கு மிகவிரைவில் குடிநீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கிணங்க அப்பகுதி மக்கள் குழாய் மூலமான
குடிநீரைப் பெறுவதற்காக இணைப்புக்களைப் பெறுவதற்காக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின்
பெக்கோ இயந்திரம் மூலம் அகழி வெட்டிக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் குழாய் மூலமான குடிநீர் இணைப்பைப் பெறுவதற்குரிய விண்ணப்ப படிவங்கள் வெள்ளிக்கிழமை(05.12.2025) வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது உப தவிசாளர் எஸ்.கயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தாம் அப்பகுதியில் குடியிருந்த காலமிருந்து இன்றுவரையில் சுத்தமான குடிநீரின்றி வாழ்ந்து வந்த நிலையில் தமது இப்பிரச்சனைக்குத் தற்போதைய மழை காலத்திலேயே தீர்வு பெற்றுத்தந்த போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment