22 Dec 2025

போரதீவுபற்று பிரதேச சபை 2026 ஆம் ஆண்டிடுக்கான பாதீடு வெற்றி.

SHARE

போரதீவுபற்று பிரதேச சபை 2026 ஆம் ஆண்டிடுக்கான பாதீடு வெற்றி.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச சபையின் சபை அமர்வு திங்கட்கிழமை(22.12.2025) சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பாதீடு முன்வைக்கப்பட்டது. 16 உறுப்பினர்கள் கொண்ட இப்பிரதேச சபையில் இப்பாதீட்டில், தமிழரசுக்கட்சியின் 08 உறுப்பினர்கள் ஆதரவாகவும், தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள் நடுநிலையாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு 05 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள இப்போரதீவுபற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றுள்ளது. 

இச்சபை அமர்வை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களும் பிரசன்னமாகி பார்வையிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.




 

SHARE

Author: verified_user

0 Comments: