20 Nov 2025

ஏறாவூர் பற்றில் வீதியில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைபிடிக்கும் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

SHARE

ஏறாவூர் பற்றில் வீதியில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைபிடிக்கும் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் அதனால் உயிரிழப்புக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுவதுடன் பலர் அவபயங்களைக்கூட இழக்க நேரிடுகின்றது. 

இதனடிப்படையில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் கூட்டத் தீர்மானத்திற்கு அமைய குறித்த பிரதேச சபைக்கு உற்பட்ட பல பகுதிகளில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் வியாழக்கிழமை(20.11.2025) மாலை நடைபெற்றது. இதன்போது பிரதேசசபை சித்தாண்டி வட்டார உறுப்பினர் வவானந்தன் மற்றும் சித்தாண்டி பொதுமக்களும் குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். 

இதன்போது 10 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிய முறையில் குறித்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு 5000 ரூபாய் அடிப்படையில் தண்ட பணம் பெறப்பட்டதுடன், கட்டாக்காலி மாடுகளை வீதிகளில் விடும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் தவிசாளரினால் விடுக்கப்பட்டது. இதன்போது தண்ட பணம் செலுத்திய உரிமையாளர்களிடம் மாடுகள் வழங்கப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: