26 Nov 2025

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரவு வேளையில் மூவர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது.

SHARE

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரவு வேளையில் மூவர்  கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது. 

பயங்கரவாத தடைச் சட்டம் போன்று தொல்பொருள் சட்டத்தினையும் சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை- சட்டத்தரணி நிதான்சன்

 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், அடங்கலாக தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர், என மூவர் சந்தேகத்தின் பெயரில் செவ்வாய்கிகழமை(25.11.2025) இரவு கொக்கட்டிச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் அறிந்தவுடன் செவ்வாய்கிழமை தினம் இரவு 10.00 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னனி துணை  செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.கிரேஷ்குமாரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை.தினேஷ்குமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தனர். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை புதன்கிழமை  நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு மாவட்டம் தாந்தாமலை பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அவர்களுடைய பெயர் பலகை இடுவதற்கு சென்றுள்ளார்கள் அந்த பெயர் பலகை காணாமலாக்கப்பட்டுள்ளது. அதில் சந்தேகத்தின் பெயரில் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சிலரைக் கைது செய்து வைத்துள்ளார்கள். 

தொல்பொருள் திணைக்களம் அவர்களுடைய பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசம் என தெரிவித்து எமது மக்களுடைய பிரதிநிதிகளையும் பிரதேச சபை உத்யோஸ்தர்களையும், கைது செய்வதானது அவர்களுடைய அதிகாரத்தை செய்யவிடாமல் தடுப்பதுமான செயற்பாடுகளை அரச இயந்திரங்களை பயன்படுத்தி இந்த அரசு செய்து கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் ஒரு வடிவமாகதான் கொகோட்டிசோலை பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை தங்களுடன் தங்களிடம் கண்கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும், அவர்கள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டார்கள் என குறிப்பிட்டு கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் நான் பொலிசார் முன்னிலையில் வினவினேன். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் தொல்பொருள் திணைக்கள அடையாளங்களை அழித்திருப்பதாகவும், சட்டவிரோத செயற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

பொலிசார் தங்களுடைய சட்ட ஏற்பாடு என்னவென்றும், தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் என்னவென்று புரியாமல் சட்டவிரோதமான முறைகளிலே பல்வேறுபட்ட கைதுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இது இந்த மாவீரர் வாரத்திலேயே தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் தொல்பொருள் என்கின்ற ரீதியில் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் விதமாகவும்மே தமிழ் மக்கள் வடகிழக்கு ரீதியாக கருதிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த ரீதியில் நீதிமன்றத்தை நாடி இவ்வாறான கைதுகள் நியாயமற்றது என தெரிவித்து தமிழ் மக்களின் நில அடக்குமுறைக்கு எதிராகவும் புராதான சின்னங்களை தங்களுக்குள் கையகப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த அரசு செய்கின்றதான ஒரு விடயத்தை செய்து கொண்டிருக்கின்றது. என்ற விடயத்தை நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டி இந்த விடயத்தினை நாம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு இருக்கின்றோம். 

எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டம் மக்களுக்கு மத்தியில் இருக்கின்ற பொழுது எங்களால் தமிழ் மக்கள் என்கின்ற சிறுபான்மை என்கின்ற நிலையில் சவால் உட்படுத்த முடியாதோ, அதைபோன்று கொடூரமாக இருக்கின்ற இந்த தொல்பொருள் சட்டத்தினையும் சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலையில் நீதிமன்றத்தில் நாடி எங்கள் சார்பில் வாதங்களை நாங்கள் முன்வைப்போம். இந்த பிரதிவாதிகளாக சொல்லப்பட்டிருக்கின்ற நபர்களுக்கு ஆதரவாக எனது கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் அவிலாசைகளுக்கு எதிராக நிச்சியமாக நாம் வாதத்தினை நீதிமன்றத்தில் முன் வைப்போம். 

ஒரு விளம்பர பதாகை ஏதேனும் வெளியிலே, அல்லது பாதையிலே நீட்டப்பட்டிருக்கின்ற பதாகை இருந்தாலும் அந்த பதாகைகள் தொடர்பிலே உள்ளுராட்சி சபைகளுக்கு அதனை நீக்குவதா அனுமதி அளிப்பதா என்பதற்குரிய அதிகாரம் இருக்கின்றது. என உள்ளுராட்சி சட்டத்திலேயே 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரிவு 21 இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

அது இலங்கையினுடைய தொல்லியல் திணைக்களமாக இருந்தாலும் அவர்கள் இந்த பிரதேசத்திலே வந்து சட்டத்தினை அமுல்படுத்தக்கூடிய வகையிலே உள்ளுராட்சி சபையின் அனுமதி பெற்று அவர்களுடைய சட்டரீதியான பலகையையோ குறியீடுகளையோ நிறுவுவதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனாலும் தற்போது சட்டரீதியை அற்ற முறையிலே ஒரு கைதுகள் செய்து சட்டத்துக்கு உட்படாத நபர்களை கைது செய்து அரசாங்கத்தை திருப்தி படுத்துவதற்காக பொலிசார் எடுத்திருக்கின்ற நடவடிக்கை எதிராக நாம் எமது கட்சியின் சார்பிலே கட்சியின் பிரதிநிதிகளும் அதன் சட்டத்தரணிகளும் பிரதிவாதிகள் சார்பிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி எங்களுடைய வாத பிரதிவாதங்களை முன்வைக்கவுள்ளோம் என்பதோடு அநீதி இழைக்கப்படுகின்ற தமிழ் பிரதேசத்தில் தொல்லியல் என்கின்ற பெயரில் தமிழர்களுடைய காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக சூறையாடப்படுவதற்கு எதிராக நிச்சியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: