மட்டக்களப்பில் பலத்த மழை தாழ் நிலங்கள்
நீரில் மூழ்கியுள்ளன. நவகிரிப் பகுதியில் 171.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.
அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 93.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 171.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 102 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 143 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 133.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 44.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 34 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், புதன்கிழமை (26.11.2025) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையக் காரியலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பழுகாமம், பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்டபல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறு குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. எனினும் மாவட்டத்திலுள்ள மிகப் பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.
அந்த வகையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 22.4 அங்குலம் உயர்ந்துள்ளதோடு அக்குளத்தில் 3 அடி உயரத்தில் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டள்ளன. தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம 20 அடி, வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி, உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ள இந்நிலையில் அக்குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்தோடு, புணாணை அணைக்கட்டின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டுநிலப் பயிற் செய்கைகளிலும், மழைநீர் தேங்கியுள்ளதனால் தமது பயிற் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் பலத்த மழை தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நவகிரிப் பகுதியில் 171.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.
மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதோடு, உள்ளுர் வீதிளிலும் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கிக் கிடப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 93.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 171.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 102 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 143 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 133.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 44.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 34 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், புதன்கிழமை (26.11.2025) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையக் காரியலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பழுகாமம், பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்டபல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறு குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. எனினும் மாவட்டத்திலுள்ள மிகப் பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.
அந்த வகையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 22.4 அங்குலம் உயர்ந்துள்ளதோடு அக்குளத்தில் 3 அடி உயரத்தில் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டள்ளன. தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம 20 அடி, வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி, உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ள இந்நிலையில் அக்குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்தோடு, புணாணை அணைக்கட்டின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டுநிலப் பயிற் செய்கைகளிலும், மழைநீர் தேங்கியுள்ளதனால் தமது பயிற் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என தெரிவித்துள்ளது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment