18 Nov 2025

குருக்கள்மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும்.

SHARE

குருக்கள்மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில்  புனித மாலை  அணியும்.

குருக்கள்மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில்  புனித மாலை  அணியும் மண்டல விரதம் பக்தி பூர்வமாக ஆரம்பம். 

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு திங்கட்கிழமை(17.11.2025) பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் திங்கட்கிழமை(17.11.2025) அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து, விசேட அபிசேக ஆராதானை நடைபெற்று, வசந்த மண்டப பூஜை நடைபெற்று பின்னர், ஐயப்ப சுவாமி புனித விரதமாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது.

48 நாட்கள் விரதத்தின்  கலியுக வரதன், ஹரிகரசுதன் ஐயப்பசுவாமியின் அருள் வேண்டி பல நூற்றுக்கணக்கான பக்தர்களும், சுவாமிமார்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விரதப்பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சுபேஸ்வரன் குருசுவாமி தலைமையிலான குழுவினரால் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது குருசுவாமியினால் விரதம் அனுஷ்டிக்கும் சுவாமிகளுக்கு புனிதமாலை அணிவித்தார்.









 

SHARE

Author: verified_user

0 Comments: