சிறைச்சாலை திணைக்களத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் போட்டி.
சிறைச்சாலைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முக்கோண கிரிக்கெட் சுற்றுப் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(19.10.2025) நடைபெற்றது.
இப்போட்டியில் மட்டக்களப்பு, பொலன்னறுவை, மற்றும் திருகோணமலை ஆகிய சிறைச்சாலை அதிகாரிகள் குழு பங்கு பற்றி இருந்தனர்.
இந்த போட்டி, சிறைச்சாலைச் சொந்தங்களிடையே ஒற்றுமையும் உடல் நலனையும், ஊக்குவிக்கும் நோக்குடன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரனின் ஒழுங்கமைப்பில், நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் அணி கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்துக் கொண்டது.
இப்போட்டிக்கான அனுசரணையை மட்டக்களப்பு
சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment