என்னைத் தேடாதீர்கள்” “நிசப்த வியாக்கியானம்” கவிதை நூல்கள் வெளியீடு.
“இலக்கிய உலகில் உலா வரக் காத்து நிற்கும் படைப்புகளை கோர்த்து புத்தகமாக்கும் ஓர் முயற்சி” என்ற தொனிப்பொருள் தாங்கிய இந்நிகழ்வு ஓட்டமாவடி தேசியக் கல்லூரியில் எதிர்வரும் நொவெம்பெர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பீட கணக்கியல் பேராசிரியர் கலாநிதி. எம்.சி.ஏ. நாஸர், சிறப்பு அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எப்.எச்.ஏ. ஷிப்லி ஹஸன் ஆகியோருட்பட வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், வழக்கறிஞர் ஹபீப் றிபான், சட்டத்தரணி எம்.எம்.எம். றாசிக், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் மௌலவியா ஜுஹி சித்தீக் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உட்பட பல அதிதிகளும் ஊர்ப்பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஏட்டுலா கனவாக்கம் அமைப்பு நூல் வெளியீடுகளைச் செய்து வருகின்றது.

0 Comments:
Post a Comment