18 Oct 2025

SHARE

வாகரை மதுரங்கேணி குளத்திற்கு அருகிலுள்ள வயலில் இறந்த நிலையில் யானை மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம்  வாகரை பிரதேசத்திற்குட்பட்ட  மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட் டுள்ளது.


நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த யானையின் உடல் கூற்று பரிசோதனைக்காக மிருக வைத்தியர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் குறித்த யானையின் உடலை வனலாகா அதிகாரிகள் குறித்த யானையை அகற்றாதமையினால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிப்பதுடன், குறித்த யானையின் உடலை அப்புறப்படுத்தினால்தான் இப்போகத்திற்தான விதைப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: