மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க விசேட செயற்றிட்டம்.
மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க விசேட செயற்றிட்டம் சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டள்ளன.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோயை கண்டறிவோம் சிகிச்சை செய்வோம், தோற்கடிப்போம், எனும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒருட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சனிக்கிழமை(18.10.2025) இடம்பெற்றது.
தற்போதைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும், ஆய்வறிக்கையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் இளவயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மார்பகப் புற்றுநோயின் பாதிப்புகள் பற்றி விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களால் இங்கு மேலும் விசேட விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment