போதைப் பொருள் கலாசாரத்தையும், பாதாள
உலகம் கலாச்சாரத்தையும், அழித்து விடுவது போன்று தேசிய இன பிரச்சனைக்கும் இந்த அரசு
தீர்வு காண வேண்டும் - ஸ்ரீநேசன் எம்.பி.
போதைப் பொருள் கலாசாரத்தையும், பாதாள உலகம் கலாச்சாரத்தையும், அவ்வாறே அழித்து விடுவது போன்று அல்லது ஒழித்து விடுவது போன்று, தேசிய இன பிரச்சனைக்கும் இந்த அரசு தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காண்பதன் மூலமாக இந்த நாட்டில் தேசியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வையும் கண்டு இந்த நாட்டை வளமான நாடாகவும் அழகான நாடாகவும் பட்டியல்ப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றன.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(19.10.2005) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போதைய பேசுபொருளாக இருப்பது போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிரான அரசினதும், காவல்துறையினதும் தீவிரமான நடவடிக்கையை குறிப்பிடலாம். அதேபோன்று பாதாள உலகம் குழுவினரை உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் இருந்தாலும் சரி அவர்களை நுட்பமாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருகின்ற விடயத்திலையும் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். ஆகவே இந்த செயல்கள் என்பது ஆரோக்கியமான விடயங்களாகவே இருக்கின்றன. அது மாத்திரமின்றி இவை பாராட்டக்கூடிய விடயமாகும்.
இந்த நாட்டைப் பொறுத்த வரையில், நாட்டின் எதிர்காலம் எமதும், மக்களின் எதிர்காலம் என்பது, போதை வஸ்து பாவனையாலும் போதை வஸ்து வர்த்தகத்தினாலும், அப்படியே சீரழிக்கக் கூடிய நிலைமை காணப்பட்டது. அவ்வாறில்லாமல் இந்த போதைப்பொருள் வலை பின்னலாக அரசும் பொலிசாரும் எடுத்திருக்கின்ற நடவடிக்கை அதேவேளை, இந்த போதைப் பொருள் வர்த்தகத்தை செய்கின்ற பாதாள உலகக குழுக்களைக் கண்டுபிடிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றாவது அவர்களை கைது செய்து கொண்டு வந்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துவதற்காகவும், அரசு எடுக்கின்ற நடவடிக்கையை இந்த நாட்டின் பொது மக்களாக இருக்கின்றவர்களும், நடுநிலைச் சிந்தனையாளர்களும், பாராட்டித்தான் ஆக வேண்டும். எனவே இந்த விடயத்தை நாங்களும் பாராட்டுகின்றோம்.
அண்மையில் இந்துனோசியா, நேபாளம், ஆகிய
இடங்களுக்குச் சென்று பொலிசார் இவ்வாறு பாரிய குற்ற செயல்களை செய்தவர்களை நாட்டில்
எதிர்காலத்தையும், வருங்கால இளம் தலைமுறையினரையும், பாழாக்கக்கூடிய விதத்தில் செயற்படுகின்ற
அந்த மோசமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நாட்டை சுத்தப்படுத்த வேண்டும், நாட்டை தூய்மைப்படுத்தப்பட
வேண்டும், என்ற அடிப்படையில் செயற்படுகின்ற நிலைமையை நாங்கள் வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.
அதேவேளை இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனை இருக்கின்றது. இந்த இன பிரச்சினைக்கும் இவ்வாறு சுத்தமாக தீர்வு கண்டு அவை தீர்க்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக இந்த நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இருக்கின்றது. விரயமாக்கப்பட்ட வளங்கள், முரண்பட்ட அரசியல் சிந்தனைகள், தேசிய ஐக்கியத்திற்கு எதிராக இருக்கின்ற மாறுபட்ட மக்கள் சக்திகளை இணைத்துக் கொண்டு செல்வதற்கு நிச்சயமாக தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயமும் தீர்க்கப்படுமாக இருந்தால் இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்ப முடியும். தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை காண முடியும். இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துவமாக சட்டவாட்சியின் கீழ் நிம்மதியாக வாழ்வதற்குரிய நிலைமை ஏற்படும். எனவே போதைப் பொருள் கலாசாரத்தையும், பாதாள உலகம் கலாச்சாரத்தையும், அவ்வாறே அழித்து விடுவது போன்று அல்லது ஒழித்து விடுவது போன்று, தேசிய இன பிரச்சனைக்கும் இந்த அரசு தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காண்பதன் மூலமாக இந்த நாட்டில் தேசியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வையும் கண்டு இந்த நாட்டை வளமான நாடாகவும் அழகான நாடாகவும் பட்டியல்ப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றன.
76 ஆண்டுகளாக புரையோடிப் போய்யிருக்கின்றன தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையையும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அதுபோலியான நடவடிக்கையாக அல்லாமல் அசல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகத்தையும், அப்படியே சீர்குலைத்து அதனை அவ்வாறே கைவிடக்கூடிய செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாகி தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற செயற்பாடு இருப்பதாக தெரிவிக்கின்றார்கள். “கீரை கடைக்கும் எதிர்க்கடை” இருக்க வேண்டும். என சொல்வார்கள் இன்று ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இருக்கின்ற பொழுது அந்த கட்சியை கையாளக்கூடிய விதத்தில் எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு கட்சியும் விசேட பெரும்பான்மை பெறுகின்ற பொழுது அவை சில வேளைகளில் தான்தோன்றித்தனமாக செயல்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், ஒன்றாக இணைந்து ஒரு சக்தியாக மாறுகின்ற பொழுது அது ஒரு ஜனநாயகத்திற்கு படமாக இருக்கும் அது பலமான ஒரு ஆளுங்கட்சிக்கு ஒரு பலமான எதிர்கட்சியை உருவாக்கும் நிலைமை இருக்கும்.
அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய
மக்கள் சக்தி கட்சியும், இணைகின்ற பொழுது அந்த இணைப்பு என்பது முற்போக்கான இணைப்பாக
இருக்க வேண்டும். மாறாக கடந்த காலத்தில் போதை வஸ்து வர்த்தகம் செய்தவர்களையும் பாதாள
உலக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களையும், கடந்த காலத்தில் கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டவர்களையும்,
அரவணைத்துக் கொண்டு செல்லக்கூடிய ஐக்கிய மக்கள் சக்தியாகவோ, அல்லது ஐக்கிய தேசியக்
கட்சியாகவோ, அந்த கூட்டு இருக்கக் கூடாது. அந்த கூட்டு என்பது மக்கள் விரும்புகின்ற
ஜனநாயக பாதையைத் திறப்பதற்கான ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான ஒரு நல்ல கூட்டாக அமைந்தால்
அதனை நாங்கள் வரவேற்க முடியும். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment