களுவாஞ்சிகுடி பகுதியில் அதிகரித்துள்ள
கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதான வீதிகளில் பகலிலும், இரவு வேளைகளிலும், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகளும், பிரயாணிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் வீதிகயில் குறுக்கீடு செய்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதோடு, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளகின்ற போதிலும் கடைகளிற்குள்ளும், ஏனைய வர்த்தக நிலையங்களிற்குள்ளும் புகுந்து திரிவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிகுடியில் அதிக சனநடமாட்டமுள்ள களுவாஞ்சிகுடி பிரதான வீதி, களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை தொகுதி, பட்டிருப்பு சந்தி, வைத்தியசாலை வீதி, உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
அப்பகுதியில் எமது வியாபாரங்களைச் சுமுகமான முறையில் மேற்கொள்வதற்கும், வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குமாக இவ்வாறு கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை உடன் சம்மந்தப்பட்டவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு கட்டாக்கலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய இறுக்கமான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தாம் வியாபார நடவடிக்கைகளை தங்கு தடையின்றி முன்னெடுக்க முடியும் எனபதோடு, பிரயாணிகளும், சிரமமின்றி பயணம் செய்ய முடியும் எனவும், அப்பகுதி வர்த்தகர்களும், பிரயாணிகளும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடிப் பொலிசாருடன்
இணைந்து இப்பிரதேசத்திற்குள் இவ்வாறு கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைக் கட்டுவதற்கும்,
மாடுகளின உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும்,
மண்முனை தென் எருவில் பற்று பிரதே சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment