2 Sept 2025

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயிரி வார செயற்பாடுகள் முன்னெடுப்பு.

SHARE

கிளீன் ஸ்ரீலங்கா   நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயிரி வார செயற்பாடுகள் முன்னெடுப்பு.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்திற்கு இணைவாக அரச நிறுவனங்களில் பராமரித்தல் செயற்திட்டம் திங்கட்கிழமை(02.09.2025) இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. 

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் அவற்றினை பொதுமக்களின் பணிகளை இலகுவாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்காக இந்த தேசிய நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. 

இதன் ஒரு கட்டமாக திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர சபையின் ஆணையாளர் எஸ்.தனஜெயன் தலைமையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார். 

மட்டக்களப்பு மாநகர சபை வளாகம் மற்றும் பூந்தோட்டம் களஞ்சிய பகுதி என்பன சுத்தப்படுத்தப்பட்டதுடன் அழகுப்படுத்தும் பணிகளும்  முன்னெடுக்கப்பட்டன. இந்த தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 








SHARE

Author: verified_user

0 Comments: