மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருக்கொடியேற்றம்.
வரலாற்று சிறப்பும், தொன்மையும், முருகனின் ஆதி இருப்பிடமாகவும், பல்வேறு தெய்வீகத்தனைமையும் நிறைந்த சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருக்கொடியேற்றம் இன்றைய தினம் (18.08.2025) இரவு சுமார் 8 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்றைய தினம் காலை ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர், சம்பிரதாய பூர்வமாக வழமைபோல் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொக்கட்டிமரம் வெட்டப்பட்டு, கொடியேற்ற உற்சவத்திற்கு எடுத்துவரப்பட்டு கொடியேற்றம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரோகரா கோசங்கள் முழங்க திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.
சூரபத்மனை முருகன் அழிக்க எய்த வேல் மண்டூரில் தில்லைமரத்தில் விழுந்ததாகவும், அதிலிருந்து தில்லை மண்டூர் கந்தசுவாமி ஆலயம் தோற்றம் பெற்றதாகவும் வரலாறுகள், இதிகாசங்கள், கூறுவதாகவும் அறிய முடிகிறது.
ஆவணிப் பூரணையினையினை தீர்த்தோற்சவமாக கொண்டமைந்து இவ்வாலய உற்சவம் 21 நாட்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல வரலாறுகளை கொண்டமைந்த இவ்வாலயத்தில் வாய் கட்டி, திரைச்சீலை மூடி, கப்புகனார் பூஜை வழிபாடுகளை நடாத்தி வருகின்றமை தொன்று தொட்டு வரும் மரபாகும்.
இப் பெருந்திருவிழாவின் 21நாட்களும் ஆரார்த்தி எடுக்கும், கன்னிப்பெண்களை, தீர்த்தோற்சவம் அன்று மயங்கி விழும் சம்பிரதாயமும் காணப்படுகிறது.
இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மட்டக்களப்பு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் கே.பிரணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment