களுவாஞ்சிகுடி பகுதியில் பொதுச்சந்தை
மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள், என்பன பூட்டப்பட்டுள்ளன.
எனினும் உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்கி வருவதோடு, கிராமங்களிலுள்ள உள்ளுர் வர்த்தக நிலையங்களும் வழமை போன்று செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
மக்கள் தமது அன்றாட செயங்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருவதையும் காணமுடிகின்றது.
0 Comments:
Post a Comment