மனிதன் தேடும் நிம்மதி எங்கே கிடைக்கும் ? மாங்கேணியில் அபிஷேக பேரொளி.
பாவங்கள் - சாபங்கள்
துன்பங்கள் - துயரங்கள்
நோய்கள் - வேதனைகள்
கவலைகள் - கஷ்டங்கள்
சோதனைகள்- சுமைகள் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு அரிய சந்தர்ப்;பம்.
முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான அருட்திரு ஜெயம் சாரங்கபாணி தலைமையில் பிரபல தேவ செய்தியாளர் வண. கலாநிதி தாமஸ் மகேர் இதில் கலந்து கொள்ள உள்ளார்.
மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அதி உன்னத நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமான உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்களை இக்கட்டுரை வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
புனித வேதாகமத்தில் தேவனாலே எல்லாம் கூடும் (மாற்கு 10:27 ) என்ற தேவ வார்த்தையின் படி சர்வத்தையும் படைத்த சர்வ ஞானி தேவனால் இப்பிரபஞ்சத்திலும் நம்முடைய வாழ்க்கையிலும் செய்யக் கூடாதவை ஒன்றுமில்லை. இறைவன் நியமித்ததை யாரைக்கொண்டும் எப்படியும் நிறைவேற்றி முடிக்க வல்லவர். அந்த வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களின் ஆன்மீக விடுதலைக்காக ஆத்தும பாரத்தோடு சுமார் 44 வருடங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இறை பணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ. ஜெயம் சாரங்கபாணி அவர்களின் தேவ செய்தியுடனான மூன்று நாள் மாபெரும் ஜெப ஒன்றுக்கூடுகை மட்டக்களப்பு, வாகரை, மாங்கேணியில் பெரேயா ஜெபவீடு வளாக திறந்தவெளி அரங்கில் மக்களின் ஆசீர்வாததிற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
நாளுக்கு நாள் வாழ்க்கையில் எதையோ தேடி, எதையோ நோக்கி, எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நாமும் நம்முடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இலங்கையை பொறுத்தமட்டில் நேற்றைய நாளோடு இன்றைய நாளை ஒப்பிடும் போது ஏதோ ஒரு மாற்றம் இருக்கத் தான் செய்கிறது. மக்கள் மனதில் அன்று இருந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் கூடவே மறைந்து கொண்டு போகிறது.
தொலைக்காட்சியிலும் சமூக வலைதளங்களிலும் வீட்டிலிருந்தவாறே தேசத்தில் மற்றும் உலகத்தில் நடக்கிறவற்றை பார்க்க முடிகிறது. அதி உயர் தொழில்நுட்பம் நிமித்தமும் நவ நாகரீகத்தினாலும் உலகம் இன்று சீர்குலைந்து அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கு நாளைய தினத்தை குறித்தும், எதிர்காலத்தைக் குறித்த பயம், நம்பிக்கை அற்ற நிலை. சடுதியில் மரணம் சம்பவித்து விடுமோ என்று ஒரு சிலர், எப்போது மரணம் சம்பவிக்கும் என்று வேறு சிலர். இவ்வுலக வாழ்க்கையில் முடியுமானவரை மனிதன் சகலதையும் செய்ய, உருவாக்க முயற்சிக்கிறான.; ஆனால் மரணம் அடையாமல் இருப்பதற்கு அவனால் கொடுக்கக்கூடியது ஒன்றுமில்லை. தனது சுய நோக்கத்தில் சார்ந்திருந்து இவ்வுலக வாழ்க்கையை மட்டும் கருத்திற்கொண்டு தனக்காக வாழ விரும்புகிறவன் பரம வாழ்க்கையை இழந்து போகிறான். வானத்துக்கு கீழும் பூமிக்கு மேலும் நடப்பவை யாவும் மாயை என புனித வேதாகமத்தில் பிரசங்கி புத்தகம் கூறுகிறது. “பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.” என்று புனித வேதாகமத்தில் யோனா 2:8 ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலகப்பிரகாரமான மகிழ்ச்சி, மதுபானம், செல்வங்கள், பல முயற்சிகள் செய்து பொருட்களை சேர்த்தல், விருப்பத்தின்படி எல்லாம் தனது வாழ்க்கையை அனுபவித்தல் போன்ற யாவும் மாயையே. உலகுக்குரிய மாயையான காரியங்களில் ஈடுப்படும்பொழுது மனதுக்கு சஞ்சலம், வேதனை, தனிமை, வெறுமை மாத்திரமே மிஞ்சும். ஆதாமின் வீழ்ச்சியின் நிமித்தம் வந்த சாபத்தினால் மனிதர் அநேக தொல்லைகளை அனுபவிக்கின்றனர். தேவனுக்கு பயப்படுபவர்களும் கொடுமைகாரரும் ஒரேவிதமான துன்பங்களை அடைவதும், ஞானியும் மூடனும் ஒரே விதமாக மரணிப்பதும் உண்மைதான். ஆனால் மரணத்திற்கு பின்னர் அவர்களின் நிலை ஒரேவிதமாக அமைவதில்லை.
பிரியமானவர்களே, சர்வத்தையும் உண்டாக்கிய தேவன் சகலதையும் அறிந்திருக்கிறார். உங்களுடைய என்னுடைய வாழ்க்கையையும் நன்றாகவே அறிந்திருக்கிறார். அவரை ஏமாற்ற முடியாது. நாம் நமது வாழ்க்கையை பற்றிய கணக்கை அவருக்கு ஒப்புவிக்க வேண்டும். அவரே எங்களுடைய வாழ்க்கையின் உரிமையாளராக இருக்கிறார் அதுமாத்திரமின்றி மனித வாழ்க்கையை புரிந்து கொள்வதற்காகவும் மனிதனுக்கு விடுதலையை கொடுப்பதற்காகவும் தேவனே மனிதனாக கிறிஸ்து வடிவில் பிறந்தார்.
புனித வேதாகமத்தில் ஏசாயா 53:5 "நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." என்ற வசனத்தின்படி மனிதன் செய்கிற பாவத்திற்கான, அக்கிரமங்களுக்கான தண்டனையை மனிதனாக பிறந்த இயேசு கிறிஸ்து அன்று கோர சிலுவையில் மரணத்தை அனுபவித்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது நமக்காக என்று உணர்ந்து அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் மனதில் மகிழ்ச்சி, நித்தியமான வாழ்க்கையை குறித்த ஒரு நம்பிக்கை அது மாத்திரமா..? மன அமைதி, சரீர சுகம், பாவ சாபத்திலிருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவை யாவும் தேவன் மனிதன் மீது வைத்த அளவுக்கடங்காத அன்பின் நிமித்தமே. புனித வேதாகமத்தில் ரோமர் 5:8ல் "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." என்று மிக தெளிவாக கூரப்படுகிறது.
நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மை நேசித்தார் எனில், இயேசு கிறிஸ்துவை ஏற்று அவருடைய ரத்தத்தினால் கழுவப்பட்டு தேவனுடைய சொந்த பிள்ளைகளான பின்பு எவ்வளவு அதிகமாய் நேசிப்பார்..? ஒரு தாய் தன் பிள்ளையை சுமப்பது போல ஒரு தகப்பன் தன் பிள்ளையை தாங்குவது போல எங்கள் பரம பிதாவும் எங்களை பராமரிக்கிறார். இவ்வாறு இன, மத பேதமின்றி மனிதகுலத்தின் அத்தனை பேரும் மனதில் சமாதானத்துடன், மகிழ்ச்சியுடனும், சகல ஐஸ்வரியத்துடனும் சுகமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். தம்மை நாடி வரும் அனைவருக்கும் இலவசமாக இவற்றை அருளுகிறார்.
பலதரப்பட்ட பிரச்சினைகள், அடிமைத்தனங்கள், மந்திர, பிசாசின் கட்டு, கடன், நோய், தற்கொலை எண்ணம், பாவ சாபம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5,6,7 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய திகதிகளில் மாங்கேணி, வாகரையில் ‘'பெரேயா ஜெப வீடு' வளாக திறந்தவெளி அரங்கில் தினமும் மாலை 4:00 மணிக்கு இப்பெருவிழா" ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. கண்ணீரோடு கவலையோடு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் குடும்பத்துடன் வந்து தேவனுடைய இலவச விடுதலையை பெற்றுக்கொள்ளுங்கள். அன்றைய தினம் அபிஷேக நிறைந்த ஆராதனை, தேவ செய்தி, விடுதலை நேர ஜெபம் குறிப்பாக இலங்கை தேசத்தின் சமாதானம், தேசத்தின் தலைவர்கள், தேசத்தின் மக்கள், தேசத்தின் சுபீட்சத்திற்கு தேவ பிள்ளைகள் ஒன்றினைந்து ஜெபிக்கும் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. வாருங்கள்... தேவனுடைய விடுதலையை பெற்றுக்கொள்ளுங்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு: போதகர் ஸ்ரீகாந்த் -077-8487666 மிஷ்பா திருச்சபை 077-1761450 விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். எதிர்பாருங்கள்… அடுத்து யாழ் நகரிலும் பிரமாண்டமான சுவிசேஷ கூட்டம்.
மட்டக்களப்பு போதகர் ஐக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில்
தேவ ஊழியர்களின் மாநாடு
மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டல் கேட்போர் கூடத்தில்
காலை 8.00 மணியிலிருந்து 1.00 மணி வரையும்
செப்டம்பர் 2,3, (செவ்வாய், புதன் கிழமைகளில்)
சிறப்பு பேச்சாளர் வண. கலாநிதி தாமஸ் மகேர் அவர்கள்
தொடர்புகளுக்கு : வண. ஜெயம் சாரங்கபாணி- 0771761450
வண. ரவி மரியதாஸ் - 0777143276
வண. விஸ்வா - 0774010688
0 Comments:
Post a Comment