பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப்
பயிற்சி.
சிறுவர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி வெள்ளி மற்றும் சனி (22,23.08.2025) ஆகிய இரு தினங்களும் நடைபெற்றது.
கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் சுரேந்திரன், மற்றும் ஜெயரெட்ணம், நிறுவனத்தின் தலைவர் ரி.ரவிச்சந்திரன், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.றேகா, மற்றும் நன்கொடையாளர்களான கரன், மற்றும் டில்சான், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பயிற்சி நெறியை சிரேஷ்ட முதலுதவி போதனாசிரியர்கான
த.வசந்தராஜா, மற்றும் வ.சக்திவேல் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குத்
தேவையான அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment