மட்டக்களப்பில் மாபெரும் விவசாய கண்காட்சி.
மாபெரும் விவசாய கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் தலைமையில் சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை(04.06.2025) இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் நவீன தொழில் நுட்பத்துடன் காலநிலைக்கு சாதகமான பாதுகாப்பு கூடாரத்தில் பயிர்ச் செய்கை தொகுதி, நகர்ப்புற மாடித்தோட்ட பயிர்ச் செய்கை தொகுதி,
மரக்கறி, இலைமரக்கறி, கிழங்கு பயிர்கள், மூலிகை தாவரங்கள், பந்தல்களில் பயிர்ச் செய்கை தொகுதி, பண்ணை பெண்கள் விரிவாக்கல் தொகுதி, காளான் செய்கை, மற்றும் தேனீ வளர்ப்புத் தொகுதி, நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் - பத்தலகொட, கிழக்கு பல்கலைக் கழகம், பண்ணை இயந்திரமயமாக்கல் பிரிவு மகா இலுபள்ளம மற்றும் பல நிறுவனங்களது காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் டப்ளியு.ஜி திசாநாயக்கா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஜெகநாத் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட உயர் அதிகாரிகள் ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment