13 May 2025

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சவுக்குமரங்கள் அமைந்துள்ள பகுதியில் திடீரென் ஏற்பட்ட தீ.

SHARE

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சவுக்குமரங்கள் அமைந்துள்ள பகுதியில் திடீரென் ஏற்பட்ட தீ.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்றயத்தினம் செவ்வாய்கிழமை(13.05.2025) பிற்பகல் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடற்கரைப் பகுதியிலுள்ள இயற்கை வனப்பு பகுதி தீயினால் எரிந்துள்ளதுடன், அதிகளவு மரங்களும் எதிரிந்துள்ளன. தமது  பிரதேசத்தில் அமைந்துள்ள இயற்கை வனப்பு வகுதியில் தீபரவல் ஏற்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், குருக்கள்மடம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், ஒன்றிணைந்து தீமேலும் பரவால் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருந்ததாகவும்இந்நிலையில் இத்தீப்பரவல் சம்பவம் திட்டமிட்ட ஓரு சம்பவமாஇதன் சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

















SHARE

Author: verified_user

0 Comments: