மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை(17.05.2025) நண்பகல் திடீரென வீசிய மினி சூறாவளியினால் அப்பகுதியில் வீடுகள் சில சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் எனும் கிராமமத்தில் வீட்டு முற்றத்தில் நின்ற வானுயர்ந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் மயிரிழையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு திடீரென ஏற்பட்ட மினி சூறாவளித்தாக்கத்தினால்
வீடுகள் சேதடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த பாவனைப் பொருட்களும், பயன்தரும் தென்னைமரங்களும்
முறிந்து வீழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தமக்கு ஏற்பட்டுள்ள அனர்த்த
நிலமை தொடர்பில் அரச உஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment