2 Apr 2025

மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி கார் விபத்து.

SHARE

மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி கார் விபத்து.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகிலிருந்த மின்கம்மபத்தில் மோதி விபத்துக்குள்ளதகியுள்ளது. 

இச்சம்பவம் புதன்கிழமை(02.202.2025) இடம்பெற்றுள்ளது. சாரதியின் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்கம்கத்தில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர்  சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு  உயர் மின் அழுத்த  மின்சாரக் கம்பம் உடைந்து  விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமை காலையிலிருந்து அப்பிரதேசத்தில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





 

SHARE

Author: verified_user

0 Comments: