மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி.
மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை(01.04.2025) நடைபெற்றது. மாருதி பாலர் பாடசாலையின் நிர்வாக பொறுப்பாளர் சரோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதன்போது வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தின் அதிபர் சின்னத்துரை மதிவர்ணன், மாணவர்களின் பெற்றோர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வருடாந்தம் நடைபெற்றுவரும் மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இந்த வருடமும் மாணசர்களின் வேலைப்பாடுகளோடு கூடிய பெருமழைவான பொருட்களைக் கொண்ட கண்காட்சியாகவே இது இருந்தது.
மாருதிப் பாலர் பாடசாலையில் இருந்து தமது
பாடசாலைக்கு தரம் ஒன்றிற்காக கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் மிகவும் திறமையான மாணவர்களாக இருக்கின்றனர் என இதன்போது கலந்து கொண்டிருந்த வந்தாறுமூலை
கணேச வித்தியாலயத்தின் அதிபர் சின்னத்துரை
மதிவர்ணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment