உளுராட்சி மன்றத் தேர்தலின் மூலம் நமது
மக்கள் தமிழரசி கட்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பி.
உளுராட்சி மன்றத் தேர்தலின் மூலம் நமது மக்கள் தமிழரசி கட்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். எமது கட்சிக்குள் இருக்கின்ற உறுப்பினர்களை பலப்படுத்த வேண்டும். அவர்களின் அந்த தலைமைத்துவம் இருக்கின்ற வரைக்கும் தமிழ் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும்.
என
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று வேட்பாளர் அறிமுக நிகழ்வு மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் புதன்கிழமை மாலை (23.04.2025) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாங்கள் தமிழரசு கட்சியை முற்று முழுதாக அழிக்க வேண்டும் அரசியல் அரங்கில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இயங்குகின்ற ஓர் அமைப்பு அல்ல. எம்மைப் பொறுத்தவரை நாங்கள் தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டி இருக்கின்றதாக இருந்தால் அதற்கு காரணம் தமிழரசிக் கட்சியை தற்போது தலைமை வகிக்கின்றவர்கள் முற்று முழுதாக எந்தக் கொள்கைக்காக தந்தை செல்வநாயகம் அவர்களுடைய காலத்திலே கட்சி அக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டதோ அந்தக் கொள்கைக்கு நேர் மாறாக அந்த கட்சியை வழி நடத்திக் கொண்டு செல்வதுதான் காரணமாகும்.
தமிழ் தேசியத்திலேயே இயங்கக்கூடிய கட்சிகளுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது ஆட்சியில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அதுபோல் ஜே.வி.பி தமக்குத்தான் தமிழ்த் தேசிய மக்கள் ஆணை வழங்கியிருப்பதாக சர்வதேச மட்டத்திலே பெரியதொரு கருத்துருவாக்கத்தினை செய்து வருகின்றது. கடந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அவர்களுடைய கட்சி அதிக அளவு வாக்குகளை பெற்றதாக கூறி தமிழ் மக்கள் அவர்களுக்குதான் ஒரு ஆணை வழங்கியிருப்பதாக ஒரு கருத்து உருவாக்கத்தை செய்து கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் நாங்கள் சந்திக்கின்ற வெளிநாட்டு தூதுவர ஆலயங்கள் இந்த கருத்துருவாக்கத்தினை எம்னிடம் தெரிவித்து வருகின்றார்கள் அதனை நாங்கள் மறுதலித்தும் வருகின்றோம்.
ஜே.வி.பி கிழக்கு மாகாணத்திலேயே வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது அங்கிருக்கின்ற சிங்கள மக்களின் வாக்குகளாலேதான் பெற்றிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளால் அல்ல.
அதுபோல் வடக்கிலே யாழ் மாவட்டத்திலே மாத்திரம்தான் ஜேவிபிக்கு பெரியதொரு வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள். ஆனாலும் யாழ் மாவட்டத்திலேயே மூன்று ஆசனங்களை அவர்கள் பெற்றிருந்தாலும் வெறுமனே 24 விதமான வாக்குகள்தான் அவர்கள் பெற்றிருக்கின்றார்கள் மீதமான 76 விதமான வாக்குகள் அவர்களுக்கு எதிரான வாக்குகளாகதோன் விழுந்திருக்கின்றன. வடக்கிலே அங்கு ராமநாதன் மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோரின் வாக்குகள் பிரிந்ததாலேதான் அவர்களுக்கு வாக்கு கிடைத்து இரண்டு ஆசனங்களும் மேலதிகமான ஒரு ஆசனமும் மூன்று ஆசனமும்; கிடைத்திருக்கின்றது. மாறாக மக்களுடைய ஆணை அவர்களுக்கு பெருவாரியாக கிடைத்தது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதல் தடவையாக வாக்களிக்கின்ற இளைஞர்கள் ஜ.வி.பி வாக்களித்திருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஜ.வி.பி யைப் புறக்கணித்துதான் இருக்கின்றார்கள். ஏன் புறக்கணித்தார்கள் என்றால் ஜ.வி.பி ஒரு இனவாத கட்சி சமாதான முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்னெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலே அந்த முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இராணுவத்தின் ஊடாக போர் வியூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மிகத் தீவிரமா இலங்கையிலே பிரசாரத்தை மேற்கொண்டு சிங்கள மக்களை முழுமையான போருக்கு உரிய மனோநிலையை தயார் படுத்தியது இந்த ஜேவிபி
இராஜபக்ச வெறுமனே இனவாதத்தை கக்கி கொண்டிருந்தவரே தவிர தத்துவார்த்த ரீதியான அந்த மக்களின் முழுமையான போருக்கு கண்மூடித்தனமான போருக்கு முழுமையாக சிங்கள மக்களை தயார்படுத்தியது இந்த ஜேவிபி தான் மக்களுக்கு இந்த ஜேவிபி யை பற்றி மிகவும் நன்றாகத் தெரியும். தற்போது தீர்வை கொடுக்க போவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள் அந்தத் தீர்வு ஒருநாளும் எனக்கு சாதகமாக அமையாது என்பதையும் எமது மக்கள் உணர்வுரீதியாக தெரிந்து வைத்துள்ளார்கள். ஜேவிபி ஒருநாளும் எமக்குரிய தீர்வினை தராது. ஏனெனில் இணைந்த வடகிழக்கு, தமிழ் தாயக கோட்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த ஜேவிபி தான் இணைந்த வடகிழக்கை பிரித்ததுதான் இந்த ஜேவிபி இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்த ஜ.வி.பி ஒருநாளும் அவர்கள் ஊடாக எனக்கு தீர்வு கிடைக்காது என்பது எனது மக்கள் நன்றாக அறிவார்கள்.
எம்னைப் பொறுத்த அளவில் ஜேவிபி பயந்து பெரிய அளவில் முகம் கொடுக்க வேண்டும் என இந்த தேர்தல் எமக்கு கிடையாது. அவர்களுக்கு அவ்வாறு வாக்குகள் விழப்போவதுமில்லை. ஆனால் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு சரியான கோணத்திலேயே வாக்குகள் விழ வேண்டும் என்பது எமது அத்தியாவசியமாகும். தேர்தல் முடிவுகளை கணிப்பதற்கு நாங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உள்ளுராட்சி தேர்தல் நிலைப்பாடு தெளிவான தமிழ் தேசியத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாய தேவை நம்மிடத்தில் இருக்கின்றது. அதில்தான் நமது முக்கியத்துவம் வருகின்றது.
ஜேவிபி ஒற்றையாட்சி முறை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி அனுரகுமார நாயக்கா அவர்கள் பல தடவைகள் கூறியுள்ளார். அந்த ஒற்றை ஆட்சி அமைக்கும் முறை என்ன என்பதையும் தெளிவாக சொல்லி உள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த ஆட்சிக் காலத்திலேயே ஒரு புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் முன்வைப்பட்டன. அந்த இடைக்கால் அறிக்கையை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும். 76 வருட காலமாக எமது இனப் பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பது அந்த ஒற்றை ஆட்சி பௌத்தர்களுடைய கையிலேதான் அந்த ஆட்சியை வழங்க வேண்டும். ஆகவே அந்த ஒற்றை ஆட்சி முறையும் இலங்கை தீவில் தமிழர்களுக்கு பொருந்தாது என எமது மூத்த தலைவர்கள் முடிவெடுத்து இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் சுதந்திரமாக சம உரிமையோடு பாதுகாப்பாக தங்களுடைய மக்களையும் தக்க வைத்துக்கொண்டு வாழ்வதாக இருந்தால் ஒற்றை ஆட்சியை நிராகரித்து ஒரு சமஸ்டி ஆட்சி ஊடாகத்தான் தான் நாம் அதனை உறுதி செய்யலாம் என்பதை எனது அடிப்படை கொள்கையாக இருக்கின்றது.
ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பை இஸ்த்தாவிப்பதற்கு தமிழரசி கட்சியின் தற்போதைய செயலாளருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் பெரிய பங்கு உள்ளது. அவர்கள் இருவரும்தான் முக்கியமாக அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசியலமைப்பை தயார்படுத்துவதற்கு வேலைத்திட்டத்தை தயார் படுத்துவதற்கு தமிழர்கள் சார்பாக அதில் இருந்து வந்தார்கள். தற்போது சம்பந்தர் ஐயா தற்போது இல்லை. ஆனால் சுமந்திரன் இருக்கிறார். அது மாத்திரம் இன்றி சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்த துரோகத்திற்காக யாழ்ப்பாண மக்கள் அவரை தூக்கி எறிந்தாலும்கூட எமது இனத்தின் கஷ்ட காலத்திற்கு அவர் தமிழரசு கட்சிக்கு ஓர் அசைக்க முடியாத ஒருவராக வைத்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் அவரை தோற்கடித்தாலும் தமிழரசு
கட்சி தமிழருடைய பாரம்பரிய கட்சி என்ற நினைப்பிலேயே மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாலே
8 ஆசனங்களை பெற்ற உடனேயே அதே சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஆணையை வைத்து தற்போது
அந்த முழு கட்சியையும் தான் மீண்டும் தனது பிடிக்குள் எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்.
எனவே இந்தத் உளுராட்சி மன்றத் தேர்தலின் மூலம் நமது மக்கள் தமிழரசி கட்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். எமது கட்சிக்குள் இருக்கின்ற உறுப்பினர்களை பலப்படுத்த வேண்டும். அவர்களின் அந்த தலைமைத்துவம் இருக்கின்ற வரைக்கும் தமிழ் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால் அந்த தலைமைத்துவத்தை திருத்தலாம். அல்லது தூக்கி எறிந்து தமிழரசுக் கட்சி தனது ஆரம்பக் கொள்கைக்கு விசுவாசமாக பயணிக்க கூடிய ஒரு புது தலைமைத்துவத்தை ஏற்படுத்தும் அந்த நாள் வருகின்ற பொழுது இந்த தமிழ் தேசிய பேரவை தமிழரசு கட்சியோடு பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தும் என்ற நம்பிக்கையை நான் இன்று தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த நிலைமை உருவாகின்ற வரைக்கும் தமிழரசுக் கட்சியோடு பேசுவது எந்த காரணத்திலும் வெற்றி கொடுக்கப் போவதில்லை என்பதையும் நான் பொறுப்போடு தெரிவிக்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment