களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சம்பியனாக
தெரிவு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான
விளையாட்டு விழா 2025 அண்மையில் களுதாவளை கெனடி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
அதில் குழுநிலை, மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளின் அடிப்படையில் களுதாவளை கெனடிவிளையாட்டுக் கழகம் இம்முறை பிரதேச மட்டத்தில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குழுநிலை போட்டிகளில்முதலாம் இடத்தை கிரிக்கெட் - ஆண்கள், எல்லே - ஆண்கள், எல்லே - பெண்கள், கபடி - பெண்கள், வலைப்பந்து - பெண்கள், கரப்பந்து - பெண்கள் என 06 தங்கப்பதக்கத்துடன், கிரிக்கெட் - பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.
மெய்வல்லுனர் போட்டிகளில் இதுவரை காலமும் இல்லாத வகையில் அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. அந்த வiகியல் 30 தங்கப்பதக்கமும், 20 வெள்ளிப்பதக்கமும், 20 வெண்கலப்பதக்கமும் அடங்கலாக 70 பதக்கங்களை வென்றுள்ளது.
குறிப்பாக இம்முறை கெனடி பெண்கள் அஞ்சல் அணியினர் இரண்டு அஞ்சல் போட்டிகளிலும் வெற்றிவகை சூடியுள்ளனர்.
பிரதேச மட்டத்தில் இரண்டாம் இடத்தை செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம் பெற்றுள்ளது.
அக்கழகம் 06 தங்கப்பக்கங்களுடன், 10 வெள்ளிப்பதக்கம்
03 வெண்கலப் பதக்கம், என 19 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ஆண்கள் பிரிவில் சாம்பியன்ஸாக கெனடி விளையாட்டு கழகத்தின் வீரர்களான தி.குகப்பிரியன் (200,400,800 மீற்றர்) நி.தருண் (1500,5000,10000 மீற்றர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் நியூட்டன் கழக ஜீ.வாசனாஞ்சலி
(400,800,1500 மீற்றர்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment