19 Apr 2025

மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம் - மக்கள் சக்தி.

SHARE

மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம் - மக்கள் சக்தி.

ஜனாதிபதியின் கரங்களை உள்ளுராட்சி தேர்தலில் பலப்படுத்துவதோடு  மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட புளியந்தீவு வட்டார வேட்பாளர் முத்துலிங்கம் துதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை(18.04.2025) இடம்பெற்று புளியந்தீவு வட்டார தேர்தல் அலுவலக திறப்பு விழாவின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

புளியந்தீவு வட்டாரமானது மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்தாலும் கடந்த 20 வருடங்களாக இப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறைவாகவும், பின்தங்கிய நிலையிலும்,  காணப்படுகின்றன.

இப்பகுதியின் குறுக்கு வீதிகள் இதுவரை காலமும் புனரமைக்கப்படாமல் உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்காகவே இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு நாங்க தேசிய மக்கள் சக்தி கட்சியில் இம்முறை தேர்தலில் களமிறங்கி உள்ளேன்.

எமது வெற்றி நிச்சயமாகும். அதன் பின்பு இந்த வட்டாரம் எழுச்சி காணும். எமது ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதோடு நமது கட்சியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள். இடம்பெற உள்ள தேர்தலில் மட்டு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக நாம் கைப்பற்றும். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: