7 Mar 2025

சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஈர்த்து இதழ் - இரண்டு சஞ்சிகை வெளியிட்டு விழா.

SHARE

சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஈர்த்து இதழ் -  இரண்டு சஞ்சிகை வெளியிட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர்-14 சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் “ஏத்து இதழ் -02”  சஞ்சிகை வெளியிட்டு நிகழ்வும் வெள்ளிக்கிழமை (07.03.2025) வித்தியாலய அதிபர் வரதராஜன் சௌஜன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது;தர சாதாரணதரம், கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வின் மற்றுமொரு அங்கமான ஏத்து இதழ் சஞ்சிகையின் முதல் நூல் பாடசாலை அதிபரால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் ஏத்து இதழுக்கான நயவுரையினை தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் சிறிதரன் வழங்கினார். 

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் பாடசாலை சமுகத்தினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இதன்போது ஆசிரிய ஆலோசகர்களான கோகுலகுமாரன், சிறிதரன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,அனுசரணையாளர்கள், கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: