மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு.
ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சிரமாதானம் ஞாயிற்றுக்கிழமை(16.03.2025) முன்னெடுக்கப்பட்டது.
கழக தலைவர் நா.பிரியதர்சன் வழிகாட்டலில் இடம்பெற்ற இச்சிரமதானப் பணியில் பற்றை காடுகளாக காணப்பட்ட குருக்கள்மடம் பொது மயானம், துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment