16 Mar 2025

மாவடிப்பள்ளி வயல் வெளிகளில் சஞ்சரிக்கும் பாரிய காட்டு யானைக் கூட்டம்.

SHARE

மாவடிப்பள்ளி வயல் வெளிகளில் சஞ்சரிக்கும் பாரிய காட்டு யானைக் கூட்டம்.

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்து வருகின்றனர். அப்பகுதியில் பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலுள்ள இந்நிலையில்  காட்டு யாகைள் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்ட யானைகளை அப்பகுதியில் காணமுடிகின்றது. அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாகவும் உள்ளன. 

அக்காட்டு யானைக் கூட்டத்தைப் பார்வையிடுவதற்கு மக்களும் கூட்டம், கூட்டமாக, வருகை தருவதையும் அவதானிக்க முடிகின்றது. காட்டுயானை கூட்டம் அப்பகுதியிலுள்ள ஆற்றுபடுக்கைகளில் குட்டிகளுடன் குளிப்பதையும் தாம் அவதானிப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். 

எனினும் இவ்வாறு தொடர்ந்தும்காட்டுயானைகள் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு, போன்ற  பிரதேசங்களுக்கு ஆபத்தாக இருக்கும் எனவும், இக்காட்டு யானை கூட்டம் அண்மைக்காலமாக அப்பகுதியில் அதிகம் வந்து செல்கின்ற போதிலும் தற்போதுதான் இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் அதிகமாகவும், பொரிய கூட்டமாகவும், வருகை தந்துள்ளதாகவும், இதனை காட்டுப்பகுதிக்குள் அனுப்புவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: