இடம்பெற உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு
பிரதான அரசியல் கட்சிகள் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகள் திங்கட்கிழமை(17.03.2025) தமது கட்டுப்பனங்களை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்துவதற்காக வருகை தந்திருந்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் அவர்களது கட்சிக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பனம் மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் செலுத்தப்பட்டது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நழீம் தலைமையில் அவர்களது கட்சிக்கான கட்டுப்பனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக
பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமக்கான கட்டுப்பனங்களை செலுத்தியதை
காணக்கூடியதாக இருந்தது.
0 Comments:
Post a Comment