கொக்கொட்டிசோலை பிரம்ம குமாரிகள் ராஜயோக
நிலையத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகள்.
புனித சிவராத்திரி முன்னிட்டு வியாழக்கிழமை(26.02.2025) இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதே வேலை சிவ அவதாரமும் மகா சிவராத்திரி சிவலிங்க தரிசனமும் நிகழ்வு கொட்டுச்சோலை பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலைய ஆன்மீக கலைக்கூடத்தில் நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
கலந்து கொண்ட அடியார்கள் அதிதிகளுக்கு சிவலிங்க தரிசனம் இடம்பெற்றதை தொடர்ந்து, மேலும் இதன்போது சிவ நடனம், உள்ளிட்ட கலை கலாசார கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி
பிரதம செயலாளர் ஆ.கோபாலரட்ணம் கலந்து கொண்டார், சுகாதார அதிகாரிகள், திணைக்களங்களின்
உயர் அதிகாரிகள், பிரம்மகுமாரி நிலையத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் நிகழ்வில்
கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment