கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான
விழிப்பு கருத்தரங்கும் கண்காட்சியும்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் செவ்வாக்கிழமை(18.02.2025) இடம் பெற்றது.
இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுள் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் போது வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய ஏற்றுமதியாளர்களை அபிவிருத்தி திட்டம் ஏனும் திட்டத்தின் கீழ் மாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களை திறனை கட்டி எழுப்புதல் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு அபிவிருத்தி சந்தை அபிவிருத்தி வணிக ஆலோசனை சேவை என்பன இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதுடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் இங்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான கண்காட்சியும் இடம்பெற்றது.
முயற்சியாளர்களுக்கு வேண்டிய தொழில்நுட்பம் வங்கிக் கடன் ஏற்றுமதி போன்ற சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வு நிகழ்வும் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலக
உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் வங்கி உயர் அதிகாரிகள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி
சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment