மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ வட பத்திரகாளி
அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி.
மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி வெகுவிமர்சையாக இன்றைய தினம் வியாழக்கிழமை(13.02.2025) இடம்பெற்றது.
தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க, பக்தர்களின்
அரோகரா கோசங்களிட்டு, பாற்குடப் பவனி ஆரம்பமாகியது.
தொடர்ந்து தேற்றாத்தீவு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தும், அங்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்குக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment