20 Feb 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை.

ரணவீரு  சேவா அதிகார சபையினால்  நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு  மண்டபத்தில் ரணவீரு  சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை(20.02.2025)  இடம்பெற்றது.

நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்காக உயிர் நீத்த முப்படை வீரர்கள், காணாமல்போன, மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் நிர்வாக தேவையினை இலகு படுத்தும் முகமாக ரணவீரு சேவா அதிகார சபையினால்  நடமாடும் சேவை நடத்தப்பட்டது. 

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் முப்படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிர்வாக சேவைகளை அவர்களின்  இடத்திற்கே சென்று அவர்களுடைய தேவைகள், பிரைச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

இதன்போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான உபகரணங்கள்,  வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தனி நபர் கடன் வசதி, வியாபாரகடன், தொழில் முயற்சிகடன், பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள், வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன. 

இந் நிகழ்வின் போது ரணவீரு  சேவா அதிகாரசபையின் உதவி பணிப்பாளர்களான தூசாரஜயசிங்க, பார்க்கயகமகே, இராணுவ இணைப்பாளர் மெகமட் ருஸ்தின், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், உயரதிகாரிகள் படைவீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: