6 Feb 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் வியாக்கிழமை(06.02.2025) அவதானித்ததுடன், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டனர். 

இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில், தற்போது பகல் வேளையாகவுள்ளது, எனினும், வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர். எனவே காட்டு யானைகளை தற்போது விரட்டுவததானது சாத்தியமற்றது. எனினும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர். 

புதன்கிழமை(05.02.2025) இரவு வால்கட்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டங்களையும், தென்னை மரங்களையும் வீழ்த்திவிட்டுச் சொன்றுள்ளன. இவ்வாறு காட்டு யானைகளினார் தாம் மிகுந்த மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: