வாழ்வாதாரத்திற்காக சிறந்த முறையில் பயன்படுத்தி
பொருளாதார முன்னேற்றங்களை அடைந்து கொள்ள வேண்டும்-உதவிப் பிரதேச செயலாளர் மேனகா.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாண்மை உதவு ஊக்க நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பின் 10 சுய தொழில் பெண் முயற்சியாளர் குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட தேங்காண் எண்ணெய் பிழியும் இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாகு குறிப்பிட்டார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்
திட்ட முகாமையாளர் ரீ.திலீப்குமார் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிக் குடும்பங்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய உதவிப்
பிரதேச செயலாளர் மேனகா, “இது உங்கள் பிரதேசம் உங்களுக்கான தொழில் ஊக்குவிப்பு முயற்சிகள்,
உங்கள் முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்கள்,
எனவே, இந்த வாய்ப்புக்களையும் உங்களுக்குத் தரப்படும் உதவிகளையும் நீங்கள் சிறந்த
முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்கள் முன்னேற்றம் சீராக இடம்பெறுகிறதா என
எங்களது உத்தியோகத்தர்கள் கண்காணிப்பார்கள்.
தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டு முயற்சியாண்மைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் பயனாளிக் குடும்பங்களுக்கு சுமார் 2இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சுய தொழில் உபகரண உதவியை வழங்கிய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்திற்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
இந்நிகழ்வில் அம்பிளாந்துறை கிராம அலுவலர் வி.கேதீஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.நிதர்ஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன களப்பணி உத்தியோகத்தர் லதா.ரவீந்திரராஜா உட்பட அம்பிளாந்துறைக் கிராமத்தைச் சேர்ந்த பயனானிக் குடும்பங்களும் பங்குபற்றினர்.
0 Comments:
Post a Comment