அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டு மென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.
புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டு மென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. எனமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதேச மட்ட அபிவிருத்திகுழு கூட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை செவ்வாய்கிழமை(28.01.2025) மண்முனை பற்று பிரதேசத்திங்காக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷின் ஏற்பாட்டில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது எமது ஜனாதிபதியினால் மக்கள் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு இதன்போது கருத்து தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத், எம்.எஸ்.நளீம், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம். இதற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். போன்ந அறிவுறுத்தல்களும் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும் இங்கு மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப் படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன.
0 Comments:
Post a Comment