27 Jan 2025

மட்டக்களப்பில் இணைய வெளியில் உணர்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி.

SHARE

மட்டக்களப்பில் இணைய வெளியில் உணர்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி.

மட்டக்களப்பில் இணையவெளியில் உணர்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பாசறையானது இலங்கை பத்திரிகை ஸ்தாபத்தினரினால் இடம் பெற்றது. 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து  இலங்கை பத்திரிகை ஸ்தாபத்தின் ஒழுங்குபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெட்ரோல் வெளிவிவகார அலுவலகம் ,சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் திங்கட்கிழமை (27.01.2025) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள  தனியார் ஹொட்டல் ஒன்றில்  விசேட செயலமர்வு  இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் 40 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்ஊடக செயலமர்வின் வளவாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைறூஸ், மற்றும் ஊடகவியலாளர் அ. ரவிவர்மன்  கலந்து கொண்டிருந்தார்கள். 

இலங்கை  பத்திரிகை ஸ்தாபனமானது ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: